அர்த்த சாஸ்திரம் என்னும் சாணக்கியரின் நீதி நூல் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.அந்த நூலில் பல நீதிகளை பற்றி தெளிவாகவும்,விரிவாகவும் விளக்கி இருந்தார்கள்.அதில் என்னை சிறிது யோசிக்க வைத்தது,பாகம் 2 : அத்யாயம் 2.இதில் விவாகம் அதில் எற்படும் விவகாரகள் பற்றி சொல்லி இருந்தார்.
விவாகரத்து பற்றியும் கூறி இருந்தார்.கணவன்,மனைவி இருவருமே ஒப்புக் கொண்டால் விவாகரத்து கொடுக்கலாம்.இது நாம் இன்று பேசும் Mutual Consent சொல்கிறது.ஆனால் விவாகரத்தில் இருவருக்கும் ஒத்து போகவில்லை என்றால் அங்கு தான் பிரச்சனை ஆரம்பமாகிறது.
அர்த்த சாஸ்திரதில் சாணக்கியர் இவ்வாறு கூறி இருகிறார், "கணவனுடன் இன்னும் இனணயாத கால கட்டத்தில்,தன்னிடம் தெரிவிக்காமலே தூரதேசாத்துக்குப் போன கணவனுக்காக அவன் எங்கிருக்கிறான் என்று தெரியாத நிலையில் 7 மாதங்கள் எதிர்பார்த்திருக்க வேண்டும்.எங்கிருக்கிறான் என்று தெரிந்த கணவனுக்காக ஒருவருடம் எதிர்பார்த்திருக்க வேண்டும்".
சாணக்கியர் கணக்குப்படி அந்த பெண் ஒரு வருடத்துக்கு மேல் விருப்பம் போல் வேறு திருமணம் செய்து கொள்ளலாம்.ஆனால் இன்று நம்முடைய சட்டத்தில் உள்ள பல ஒட்டைகளை பயன்படுத்தி எங்கு இருக்கிறார்கள் என்று தெரியாமல் Case கு மட்டும் stay வாங்குகிறார்கள்.
இதனால் ஒரு வருடத்தில் முடிய வேண்டிய விஷ்யத்தை,பல வருடம் இழுத்து அடிக்கிறார்கள்.நான் இங்கு சொல்லுவது விவாகம் விஷ்யத்துக்கு மட்டும் அல்ல,அனைத்து விதமான case(civil,criminal etc)கும் பொருந்தும்.விவாகம் பற்றி கூறியதற்க்கு காரணம்,அது வாழ்க்கை சம்பந்தம்பட்டது.நஷ்டம் ஜாஸ்த்தி.In all waste of Life,Time,Resource,Money and everything.
நாம் பல முன்னேற்றம் கண்டு உள்ளோம் என்று மார்தட்டி சொல்லி கொள்கிரோம்,ஆனால் இந்த நூலை படித்தால்,நாம் இன்னும் சட்டம் ஒழுங்கில் பின் தங்கிய நிலையில் இருக்கிறோமோ என்ற சந்தேகம் வருகிறது.
அரசாட்சியில் இருந்த சட்டம் ஒழுங்கு,சுய ஆட்சியில் தொலைந்து விட்டது போல் தோன்றுகிறது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment