என்னுடய ஒரே பொழுதுபோக்கு தொலைக்காட்சி பார்பது தான் ,சீரியல் மட்டும் இல்லை எல்லா வகையான நிகழ்ச்சியும் பார்பேன்.அதில் விஜய் TV கோபிநாத் நடத்தும் "நீயா நானா" நிகழ்ச்சியும் பார்பது உண்டு.சிறிது நட்களுக்கு முன்பு குடும்பத்தில் எற்படுகின்ற பிரச்சனைக்கு தீர்வு விவாகரத்து என்றும் விவாகரத்து தீர்வல்ல என்றும் இரண்டு பிரிவுகளாக விவாதம் நடந்தது.ஒவ்வொருதரும் அவர்களுடைய பிரச்சனைகளை ,அவர்கள் எடுத்த முடிவுகளையும் கூறிக் கொண்டு இருந்தார்கள்.விவாதம் நன்றாக போய் கொண்டு இருந்தது .அதில் ஒரு பெண் தன் சிறு வயதில் காதல் திருமணம் செய்து கொண்டதையும், கல்யாணம் ஆன புதிதில் கணவனின் அன்பும் பாசமும் இரு குழந்தைகளை பிறந்தவுடன்
தடம் புரண்டதையும் சிறிது வருடங்களில் அவளை விட்டு சென்றதையும் அந்த இரண்டு குழந்தைகளின் வளர்ச்சிகாகவும் படிப்பிற்காகவும் கணவனை பலமுறை தொடர்பு கொண்டும் பலன் அளிக்காத பட்சத்தில் தாய் வீடு வந்து வியாபாரம் செய்து இன்று தன்னுடைய 27 வயதில் நல்ல வசதியான நிலையில் இருப்பதாகவும் ஆகையால் இந்த மாதிரி சூழ்நிலையில் விவாகரத்து தான் பிரச்சனைக்கு தீர்வு என்று மிக தெளிவாகவும் நிதானமாகவும் கூறினாள்.
நான் இந்த செய்தியை எழுதுவதற்கு காரணம் விவாகரத்து சரி என்றோ தவறு என்றோ சொல்ல அல்ல.எவவள்வோ நிகழ்ச்சிகளையும்,பலதரப்பட்ட மனிதர்களை பார்த்தும் ,பேசியும் இருக்கும் திரு.கோபினாத் அவர்கள் அந்த பெண்ணை பார்த்து கேட்ட கேள்வி தான் என் மனதில் ஒரு வேதனையும் ,சந்தேகத்தையும் எற்படுத்துகிறது.அந்த பெண்ணை பார்த்து அவர் "இந்த் தெளிவான பேச்சும் சீரிய சிந்தனையும் தான் ஒரு வேளை உங்கள் விவாகரத்துக்கு காரணமாக இருக்குமோ" என்று கேட்டார்.அவள் அதற்கு இல்லை நான் அப்பொழுது ரொம்ப innocent என்று கூறினாளே தவிர ஒரு பெண் தெளிவாகவும்,சீரிய சிந்தனையுடன் இருப்பது தவறா? என்று கேட்க வில்லை.சரி பரவாயிலை அங்கு இருந்த எந்த ஒரு பேச்சாளர்கள்குமே கேட்க தோன்றவில்லை என்பது தான் மிகுந்த வேதனை கலந்த ஆச்சரியம்.ஒரு பெண்ணுக்கு 33% சொத்தில சமபங்கு தேவை இல்லை.பெண்ணின் தெளிவான பேச்சில் உள்ள நியாத்தையும் அவளுள் உண்டாகின்ற சீரிய சிந்தனையும் பாராட்டினாலே போதும் எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரளவு தீர்வு எற்படும்
Subscribe to:
Post Comments (Atom)
அற்புதமான விஷயம்.. நிறைய பேருக்கு இருக்கும் குழப்பம் இந்த கேள்வியின் வழியாக வெளிவருகிறது.. உண்மையில் சிந்திக்க தெரிந்த பெண்ணை பார்த்து பயப்படும் ஆண் சமுதாயம் அதிகம் உள்ளது...தன் முடிவுகளை தானே எடுக்க தெரிந்த பெண்ணை ஏற்று கொள்ளுதல் பற்றி பயம் அதன் விளைவே.
ReplyDelete