கம்பு தோசை
தேவையானவை: கம்பு 2 கப், புழுகங்கலரிசி 1/2 கப்,பச்சரிசி - 1/2 கப்,காய்ந்த மிளகாய் - 4 ,உப்பு - தேவையான அளவு, பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்,பொடியாக நறுக்கிய கொத்துமல்லி - சிறிதளவு,துருவிய தேங்காய் -ஒரு டேபிள்ஸ்பூன் , எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை : கம்பை தனியக 2 மணி நேரம் ஊறவைக்கவும்.அரிசி இரண்டையும் சேர்த்து ஒன்றாக 2 மணி நேரம் ஊற வைக்கவும்.ஊறவைத்த கம்பு,அரிசி,காய்ந்த மிளகாய்,உப்பு,பெருங்காயம், தேங்காய் துருவல் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து நைஸாக அரைக்கவும்.பின்னர் கொத்துமல்லியை கலந்து தோசைகளாக வார்க்கவும்.
வெந்தய தோசை
தேவையானவை: வெந்தயம் 1 கப்,பச்சரிசி - 1/2 கப்,காய்ந்த மிளகாய் - 2 ,உப்பு - தேவையான அளவு,எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை : வெந்தயம் ,அரிசி,மிளகாய் மூன்றையும் 5 மணி நேரம் ஊற வைக்கவும்.பிறகு நைஸாக அரைக்கவும்.உப்பு போட்டு கரைத்து வைக்க்கவும்.மாவு 5 மணி நேரம் புளிக்கட்டும்.இது சிறிது கசப்பாகத்தான் இருக்கும்.(ஆனால் புளித்தால் கசப்பு அவ்வளவாகத் தெரியாது.).வெயில் காலத்துக்கு ஏற்ற தோசை.சூடாக வார்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment