இங்கே நான் வாரமலர் இதழில் படித்த சிறுகதை பற்றி கூற விரும்புகிறேன்.மார்ச் 8 2009 வெளியான இதழில் இருந்து என்னை மிகவும் வருத்தப்படவும் சிந்திக்கவும் வைத்த கதை... கதையின் தலைப்பு "சொல்லுகளேன்".. இந்த கதையில் வரும் பெண்ணுக்கு தன்னுடய கணவன் அவனுடய கடந்த வாழ்கையில் தன்னுடய சொந்த அக்காவை ஏமாற்றியவன் அதன் மூலம் தன்னுடய அக்கா அவளுடைய உயிரை மாய்த்துக் கொண்டாள் என்று தெரிந்த பிறகும், இந்த சமுதாயம் மேல் உள்ள பயம் ,மற்றும் தன்னுடய குழந்தையின் வாழ்கை ,தனக்கு ஏற்படும் கெட்ட பெயர்கள் என பலவாராக சிந்தித்து அவனுடன் வாழ்கிற மாதிரி , இதற்கு முடிவு என்ன என்று கேட்பது போல் கதையை முடித்து இருந்தார்கள்.
இதில் வருத்தப் படகூடிய விஷயம் என்ன என்றால், இந்த 21 நூற்றாண்டில் , அதுவும் பெண்கள் பல துறைகளில் முன்னேறி வரும் இக்காலத்தில் இப்படி ஒரு கதை ,அதுவும் உலக மகளிர் தினத்தன்று இந்த மாதிரி கதை வெளி ஆகி இருப்பதுதான் . "பயம் தான் வாழ்கயின் முன்னேற்றத்துக்கு மிக பெரிய எதிரி".இதை இக்காலத்துப் பெண்கள் நன்றாகவே புரிந்து இருக்கிறார்கள்.இவ்வாரு இருக்கும் சமுதாயதில் ஒரு மிக பெரிய மலர் இப்படி ஒரு கதைக்கு பரிசு கொடுத்து வரவேற்று இருப்பது மிகவும் வருத்த பட வேண்டிய விஷயம்.
Subscribe to:
Post Comments (Atom)
Hi,
ReplyDeleteCongratulations for coming out with a blog. Write a lot.
I did read that story. Why dont you give a solution in the form of a story. Why dont you continue with your thoughts. just give a try.
I'm Muthu's friend.
Regards
Anu
Hi Anu
ReplyDeleteThanks for you comments!!.I will try to give the solution to that story in my way :) you can expect that by next week.
ஒரு தோழியின் விருப்பத்தின் காரணமாக ,இந்த கதைக்கு என்னுடைய முடிவு என்னவாக இருக்கும் என்று ஒரு சிறிய கற்பனை.முதலில் அந்த தோழிக்கு என் நன்றிகள்.
ReplyDeleteஎன் கற்பனையில் உருவாகும் பெண்ணுக்கு எப்போழுது தன்னுடைய கணவன் தப்பானவன் என்று தெரிந்ததோ,அவனுக்கு திருந்துவதர்கு சில சந்தர்ப்பங்கள் தருவாள்.சில தவறுகள் நடப்பது இயல்பு,அந்த தவறை செய்தவரை எப்போழுதும் அந்த கண்ணோடத்தில் பார்பது பார்பவருடைய தவறு.அதனால் திருந்துவதற்க்கு சில சந்தர்பங்கள் தரலாம்.எப்போழுது தன்னுடைய தன்மானம் பாதிக்க படுகிறது என்று அந்த பெண் உணர்கிறாளோ ,அதற்கு மேல் அவனுடன் வாழ்வதில் அர்தம் இல்லை என்று எண்ணி தன்னுடைய வாழ்க்கையை தன்னால் பார்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் அந்த வீட்டில் இருந்து தன்னுடய குழந்தையுடன் வெளியே வந்துவிடுகிறாள்.
நன்றாக படித்த அந்த பெண் (மலரில் சித்தரித்த பெண் நன்றாக படித்த பெண்) ஒரு இடத்தில் வேலைக்கு சேர்ந்து தன்னுடைய குழந்தையை நன்றாக படிக்க வைக்கிறாள்.
தானும் தன்னுடைய வேலையில் நல்ல முன்னேற்றம் காண்கிறாள் . "SUCCESS IN SELF IS THE BEST WAY OF REVENGE".
இவ்வராக போய் கொண்டு இருக்கிற அவள் வாழ்கையில், அவளுடன் பணி புறிகிற ஒருவன் ,அவளை நன்றாக புரிந்த ஒருவன்,அவளை தன்னுடய வாழ்க்கை துணையாக விருப்பம் தெரிவிக்கிறான்.
இவள் பலவரக சிந்தித்து,தன்னுடைய மனதில் தோன்றும் சந்தோஷம் துக்கம் இரண்டையும் பகிர்ந்துகொள்ள ஒரு துணை வேணும் என்று முடிவு எடுத்து அவனை மணந்து கொள்கிறாள்.அதன் பிறகு அவள் வாழ்கை முழுவதும் இன்பமே.அன்றுதான், அவள் உணர்தாள், வாழ்கையில் நடக்கின்ற ஒவ்வொரு கெட்ட சம்பவங்களும் நலதுக்கே.... :) :)
வாழ்கையை தைரியமாக எதிர் நோக்குபவர்களுக்கு எல்லாம் இன்பமே.